சனி, 28 ஜனவரி, 2012

பயணச் சுமை

பயணச் சுமை
பார்வையும் பயணமும்
ஒரே நோக்கில் இல்லையென்றால்
படு குழியில் விழுந்து போவதால் என்ன பயன்?

ஆசை பாவங்களை சுமக்கச் செய்கிறது
வறுமை வாழ்க்கையை  சுவைக்கச் செய்கிறது

பாவங்களை சுமப்பதைவிட
வறுமையை சுவைப்பது சுகமானது.
                                                                       - பிரேம்நசீர்.


வென்று தோற்றவன்

  வென்று தோற்றவன்
     நானாகத்தான் தோற்றேன்
     நான் வென்றால் சிலருக்கு கஷ்டம்
     நான் தோற்றால் எனக்கு மட்டுமே நஷ்டம்
 
     உழைப்பும்  உறுதியும்
     முயற்சியும்  உள்ளவனுக்கு
     வெல்வது ஒன்றும் கஷ்டமில்லை.
                                               - பிரேம்நசீர்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

அகர முதல...

'அ' அம்மாவினுள் உற்பத்தியாகி
அழுகையில் தொடங்கி   
அனைத்து மொழிகளின் ஆரம்பமாகி
அகிலமே உச்சரிக்கும் முதல் ஒலி
அம்மா என்ற அகர ஒலி    அதுவே
மானுடத்தின் அறிவு  ஒளி.
                                                - பிரேம்நசீர்.