உன் கண்ணில் நீர் வழிந்தால்...... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.....
அருமையான பாடல்! அற்புதமான நடிப்பு!! வாழ்வின் யதார்த்தம்!!!
வியட்நாம் வீடு 1970 களில் வந்த சிறந்த திரைப்படம்.
காதலும் பாசமும் மிக்க கணவன் மனைவி,
பொருத்தமான ஜோடி சிவாஜி கணேசன்-பத்மினி,
நடிப்பில் ஜீவனை
தந்தவர்கள்!
வயதான பெற்றோர், பெற்ற பிள்ளைகளால் படும் துயரத்தை அப்படியே அசலாய்.....
பிள்ளைகளின் செயல்களால், மனம் வேதனை படும்போது, கணவன்-மனைவியின் அரவணைப்பும்
ஆறுதலும் எந்த அளவுக்கு மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் என்பதற்கும்,
எனக்கு நீ! உனக்கு நான்! சாகும் வரை தொடரும் என்ற உன்னத உறவின் உயிர் துடிப்பை,
இயல்பான தங்கள்
நடிப்பால் நம்மையும் சேர்த்து ஆழ வைத்து விட்டார்கள்.
நடிகர் திலகம் அவர்களுக்கு இத்திரைபடம் ஒரு மைல்கல் ஆக இருந்த்து.
வாழ்க்கையின் அர்த்தங்களை மிக ஆழமாய் சொல்லும் கண்ணதாசன்
வரிகள்.........மனைவியை...... மிக ஆழயாய்...நேசிக்க சொல்கிறது!
கவிஞர் கண்ணதாசனின் அனுபமிக்க, யதார்த்த வரிகளினால்.........
கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு காதலும், பாசமும் மிக்கது என்பதையும்,
ஒருவருக்கு ஒருவர்
தரும் ஆறுதல்கள், அவர்களின் துயர் துடைக்க... வேதனையின் வெப்பத்தை.....மனம் சுமக்க
முடியாத சுமைகளை இறக்கி வைக்க...என்று கணவன்-மனைவி உறவை எவ்வளவு ஆழமாய் சிந்தித்து
எழுதிய கல்வெட்டு வார்த்தைகள் இவைகள்.
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்...... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.....
......மார்பில் என்னை தாங்கி...வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல்
தணியுமடி.
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன?
வேர் என நீ இருந்தாய் அதில் (அதனால்) வீழ்ந்து விடாதிருந்தேன்.
உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி!
பொண்ணை மணந்ததனால்.... சபையில் புகழும் வளர்ந்ததடி!
பாடல்கள் வெறும், கேட்டு ரசிக்க மட்டுமல்ல.......
அவைகளை கேட்டு சிந்திக்கவும் செய்ய......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக