சனி, 28 ஜூன், 2014

என் வாசலின் வழியே.......விழி நிறைந்தது.


அனுப்பதல்: பிரேம்நசீர்,  கைப்பேசி: 94431 94477.
                          செம்பனார்கோயில் - 609 309.

பெறுதல்: திரு. உத்தமசோழன் அவர்கள்,
                     ஆசிரியர், கிழக்கு வாசல் உதயம்,  திருத்துறைப்பூண்டி - 614 715.
                                             
அன்பிற்கினிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.  கிழக்கு வாசல் உதயம் பற்றி என்னுடைய அபிப்ராயம் எழுத பலமுறை முயன்றும் இயலவில்லை.  மே மாத இதழ் சில தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்றேன். நான் முதலில் படித்த்து,

என் வாசலின் வழியே....., தங்களின் மடலைத்தான்.  என் விழிகள் நிறைந்தன.  இன்றய இயந்திரதனமான வாழக்கையில் மனிதம்  சிதைக்கப்பட்டு, சுயநல விலங்குகளாய் ஒவ்வோருவனும்  வாழ முற்படுகின்றான். அது பற்றிய ஒரு கருத்தை இங்கு பதிவு செய்துள்ளேன். அச்சுக்கு ஏற்றதாக இருந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

என் வாசலின் வழியே.......விழி நிறைந்தது.

மனசெல்லாம் மலர்காடாகும் .......
கிழக்கு வாசல் (உதயம்) திறந்தால்...
மலர்க்காட்டில் பல் மண மலர்களின் நறுமணம்,
மனதை வருடும் ......... சிந்தனையை ........தூண்டும்.
சில மலர்கள்,
மலர்ந்தும் .....  மலராத ......பாதி மலராய் .... (நீ பாதி - நான் பாதி..கண்ணே...)
இயற்கை  நியதிகளுக்கு  உட்பட்டு மணம் வீச முற்படும்போது,
(வாழ்க்கை) புயலின் ...... சீற்றம் ..... பிரித்துப்போடும் போது,
பாவம்,  அந்த மலர்கள் படும் துயரம் ...அப்ப...ப்பா........
( நிறையுறா வாழ்க்கை )

மலர்க்காட்டில், ஒற்றை ரோஜா பூ தனித்திருக்கும்.
 ஆனால்,
மல்லிகை - முல்லை மலர்கள் கூட்டமாய்த்தான்  சிரிக்கும்.

நகர வாழ்க்கை........நரக....... வாழ்க்கையாய் போனதோ...?
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நம் முன்னோர்கள் சொன்னதை
அறிந்தும் .................அறியாமல்...........வாழ்ந்து   கொண்டிருக்கிறோம்.

                                           - பிரேம்நசீர்,செம்பனார்கோவில். 27-06-2014.          
இது இணயத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பொறுத்தமாக இருக்குமென்று இணைத்துள்ளேன்