வெள்ளி, 11 ஜூலை, 2014

தென்றலும்…முல்லையும்



தென்றலும்…முல்லையும்

தவழ்ந்தது   தென்றல்……
தடை பல கடந்து….. நதிகளையும் தாண்டி
பச்சை மலர் கொடியில்  பல் சிரிக்கும்
முல்லைகள் ….. காத்திருந்தன.

அந்தி நேரம்….. ஆசை பொங்க
மொட்டுக்கள்  மலர்ந்தன…..
முல்லையின்    மணம்……
தென்றலை  மணம் புரிய அழைத்தது.

சுவைக்க  நினைத்தது   காற்று,
கண்டது…  கடும்சினத்துடன் … கார்மேகம்
கரும் ஆடை போர்த்திய  வேகமாய்…

வசதியாய்ப்போச்சு…….!
ஆலிங்கனம் செய்ய என,   மெல்ல தழுவியது தென்றல்
அந்த கருத்த வெளிச்சத்தில்....

தென்றல் தழுவியதால்….  நழுவியது போல்,
முல்லைக்கொடி (இடை) அசைந்தாடியது…..
அரங்கேறியது… ஆனந்தம்… ஆனந்தம்…..!
தூறல்…. தூறல்….. மழைத்தூறல்.

தணிந்தது…. இளம் வெப்பம் !
குளிர்ந்தன….தென்றலும்  முல்லையும் !
ரசித்தன…… கண்கள் !           
                                   - பிரேம்நசீர்.