தமிழ் திரைப்பட பழைய பாடல்கள்
''சொன்னது நீதானா.. சொல்... சொல்... என்னுயிரே..... அற்புதமான பாடல் ''
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காவிய வரிகள்... முழு திரைக்கதையை நமக்குள் புகுத்திவிடும். பி.சுசிலாம்மாவின் குரல் தாயின் தாலாட்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மெல்லிசை, அதுவும் அந்த
வீணையின் நாதம்........நம்மை மெய் மறக்கச்செய்கிறது.
''நெஞ்சில் ஓர் ஆலயம்'' தேவிகா - முத்துராமன் இயக்குநர் சிறிதர் அவர்கள் இயக்கிய அற்புத திரைப்படங்களில்.....அருமையான காட்சி.
''...................இன்னொரு கைகளிலே! யார்...யார்....நானா ?
மங்கள மாலை, குங்குமம் எல்லாம்... தந்ததெல்லாம் நீ தானே ?
மணமகளை திருமகளாய் நினைத்ததும் நீ தானே ?
என் மனதில் உன்மனதை இணைப்பதும் நீ தானே ?
இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீ தானே ?
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா ?
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கைதொடலாமா ?
ஒரு கொடியில் ஒருமுறை தான் மலரும் மலரல்லவா ?
ஒரு மனதில் ஒருமுறை தான் வளரும் உறவல்லவா ?
இன்னொரு கைகளிலே............''
கவிஞர் ஆழமாக சிந்தித்திரிக்கிறார்.
முத்துராமன் மவுனம்...... முகத்தில் தவிக்கும்.
தேவிகா... முகத்தில் காதல் வாழ்ந்ததை சொல்லும் உயிர் துடிப்பு...
அவர் வீணை மீட்டும் விரல்களைப்பாருங்கள் அதில் தெரியும்....ஜீவன்.
கவிதை, பின்னனிக்குரல், இசை, காட்சியமைப்பு, நடிப்பு, இயக்குநர் என்று எல்லா அம்சங்களுடன் காலம் போற்றும் பாடல்களில் இதுவும் ஒன்று.
நான் தினமும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. - பிரேம்நசீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக