ஆசையை தூண்டி
நுகரவைக்கும்
விளம்பர - வியாபார உத்திகள்
ஒன்றுக்கு இரண்டை
வாங்க வைக்கும்,
தற்பெருமை வணிகம்
பர்சை பஞ்சராக்கிக் கொண்டு
பெருமை பட்டுக்கொள்ள மட்டுமே!
சிறு கடைக்காரர்கள்
மற்றும் அன்றாடம் விற்றுப்பிழைத்த வறியவர்களின்
வயிற்றுப்பாட்டை கேள்விக்குறியாக்கிய
நுகர்வோர் கலாச்சாரம்
பெருமை பட்டுக்கொள்ள
மட்டுமே!!
ஒவ்வொரு மனிதனிடமும் உழைப்பும், சேமிப்புமாய்
இருந்த கிராம பொருளாதாரம்,
ஒட்டு மொத்தமாய்
பெருவணிக கும்பலால்
அள்ளப்படுகிறது.
நாட்டில் பரவலாய் இருந்த காசு பணம்
எல்லாம், ஒரு சிலரிடம் மட்டும்.
பொருளாதார முன்னேற்றம் என்று....
பெருமை பட்டுக்கொள்ள
மட்டுமே!!!
பகட்டும், தற்பெருமையும்
தான் வாழ்க்கை என்ற
அமெரிக்க - ஐரோப்பிய கடனாளியாக்கும் கலாச்சார, வணிக தந்திர சித்தாந்தத்திற்கு கொத்தடிமையாய் வாழ
விட்டில் பூச்சிக்களாய் வீழ்பவர்கள்
பெருமை பட்டுக்கொள்ள
மட்டுமே.
நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாய்.........
- பிரேம்நசீர் 20-10-2018.
மனசுக்குப்பிடித்த விசயங்கள். பறவைகளின் எச்சங்களாய் இங்கு விதைக்கப்பட மட்டுமே, விவாதத்திற்கு அல்ல. காடு வேண்டும் மழைக்காக. காட்டில் எல்லாம் வேண்டும் நாம் வாழ்வதற்காக.
சனி, 20 அக்டோபர், 2018
பொருளாதார வளர்ச்சி நோக்கி......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக